Publish Date: Mon, 21 Apr 2008 (19:48 IST)
Updated Date: Mon, 21 Apr 2008 (19:47 IST)
திருப்பத்தூரில் பத்தாம் வகுப்பு ஆசிரியர் ரஃபி. சினிமா மீது கொண்ட காதலால் தானே இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் புதிய பயணம். சென்ற வாரம் சென்னை எம்.ஜி.ஆர், ஃபிலிம் சிட்டியில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் ஆரம்பமானது.
படப்பிடிப்பின் தொடர்ச்சியாக நேற்று சின்மயா நகரில் உள்ள பாபா ஹவுஸில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் ஹீரோ ரஃபி, ஹீரோயின் மதுமிதா மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்தனர்.
பார்வையற்ற ஹீரோவுக்கு இடையில் பார்வை திரும்புகிறது. அப்படி பார்வை திரும்ப தனக்கு கண் தானம் வழங்கியது யார்? என்று ஹீரோ கேட்க, ஹீரோயின் தான் தன் கண்ணை கொடுக்க முன்வந்தார் என்று டாக்டர் சொல்ல, ஹீரோ அதிர்ச்சியுடன் பார்க்கும் காட்சி படமாக்கப்பட்டது.
தொடர்ந்து ஏவி.எம்., பிரசாத் போன்ற பல்வேறு தளங்களில் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அடுத்து கேரளாவுக்கு பாடல் காட்சிகளுக்காக மொத்த பூனிட்டும் செல்லவிருக்கிறது.