குசேலனில் எனக்கு கெஸ்ட் ரோல்தான் என்றார் ரஜினி. தொடக்க விழாவில் இன்னும் அழுத்தமாக, குசேலனில் எனது பங்களிப்பு இருபத்தைந்து சதவீதமே என்று சொல்லிப் பார்த்தார்.
ஆனால், யார் கேட்கிறார்கள்?
ரஜினி ஒரு சீனில் வந்தால்போதும், கோடிகளைக் கொடுத்து படத்தை வாங்கத் தயார் என்று கவிதாலயாவை சுற்றி வருகிறார்கள். இன்றைய தேதியில் குசேலனுக்குதான் டிமாண்ட். படத்தின் மொத்த உரிமையையும் வாங்க பல கம்பெனிகள் போட்டியிடுகின்றன.
ரிலையன்ஸின் அட்லாப்ஸ், பிரமிட் சாய்மீரா, ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் என எல்லாமே மெகா நிறுவனங்கள். இவற்றுடன் ஜெமினி லேபும் ரேஸில் உள்ளது.
இறுதி வெற்றி யாருக்கு என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.