சமகால உலக சினிமாவை சென்னைவாசிகளுக்கு இருக்கும் ஒரே வசதி திரைப்பட விழாக்கள்தான். இந்த வசதியை வஞ்சகமில்லாமல் செய்து வருகிறது, ஐ.சி.ஏ.எஃப். (இன்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன்)
ஐ.சி.ஏ.எஃப்., டெல்லி ஹங்கேரியன் இன்பர்மேஷன் மற்றும் கல்சுரல் சென்டர் இணைந்து சென்னையில் ஹங்கேரி திரைப்பட விழாவை நடத்துகின்றன.
இரண்டு திரைப்படங்கள் சென்னை பிலிம் சேம்பரில் திரையிடப்பட்டது. படத்தின் பெயர் 'ஒயிட் பாம்ஸ்' மற்றும் 'நோவாஸ் ஆர்க்'. இரண்டுமே ஹங்கேரியின் முக்கியமான இயக்குநர் Hajdu Szabolcs இயக்கியவை.
இன்று இரண்டு படங்கள் திரையிடப்படுகின்றன. ஒன்று ஹெரண்டி கோபர் இயக்கிய லோரா. இன்னோன்று சஸ்தாமஸ் இயக்கிய எஸ் ஓ எஸ் லவ்.
ஹங்கேரியன் திரைப்படங்கள் குறித்து அறிந்துகொள்ள இரண்டு படங்களுமே சரியான தேர்வுகள்.