தலேர் மெஹந்தி! இந்தப் பெயரைத் தெரியாத இசை ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். பஞ்சாபைச் சேர்ந்த பாடகரான தலேர் மெஹந்தியை நினைவுபடுத்தும் வேடத்தில் கமல்ஹாசன் தசாவதாரத்தில் நடித்துள்ளார். கமல் நடித்திருக்கும் பத்து வேடங்களில் இதுவும் ஒன்று.
கமலுக்குத் தனது தோற்றத்தைக் கொடுத்துள்ள தலேர் மெஹந்தி, ரஜினிக்குத் தனது குரலைக் கொடுத்துள்ளார்.
குசேலன் படத்தில் இடம்பெறும் டூயட் பாடல் ஒன்றிற்கு ரஜினி, நயன்தாரா ஆடுகின்றனர். இந்தப் பாடலில் ரஜினிக்குக் குரல் கொடுத்திருப்பவர், அதாவது பாடியிருப்பவர் தலேர் மெஹந்தி.
இவர் தமிழ்ப் படம் ஒன்றில் பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.