மீண்டும் சினிமாவிற்கே திரும்பியிருக்கிறார் காயத்ரி ரகுராம். விசில், சார்லி சாப்ளின் படங்களில் நடித்த காயத்ரிக்கு நடிப்பு கை கொடுக்கவில்லை. அமெரிக்காவில் டைரக்ஷன் கோர்ஸ் படித்தார். பிறகு திருமணம். அதிலும் தோல்வி கண்டவர் மீண்டும் தங்கள் குலத்தொழிலுக்கே திரும்பியிருக்கிறார்.
குலத்தொழில்? காயத்ரியின் அப்பா ரகுராம் தமிழ் சினிமாவின் சீனியர் நடன இயக்குநர். கலா மாஸ்டர் எல்லாம் இவரின் சிஷ்யைதான். நடனத்தின் அனைத்து நுட்பங்களும் காயத்ரிக்கு அத்துப்படி.
இரண்டு மலையாளப் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிவரும் காயத்ரி, தமிழில் ஜெயம் கொண்டான் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கிறார்.
தெரிந்த தொழிலாவது காயத்ரிக்குக் கை கொடுக்க வேண்டும்.