பத்து நாளில் கோடீஸ்வரன் புத்தகங்களுக்கு மவுசு குறையவே குறையாது. இயக்குநர் விக்ரமனுக்கு பத்து நாளெல்லாம் வேண்டாம். ஐந்து நிமிடப் பாடலிலேயே நாயகனை குபேரனாக்கி விடுவார்.
எஸ்.டி.குணசேகரன் இயக்கும் இன்னொருவன் படமும் ஏறக்குறைய இதே கதைதான். எல்லா மனிதர்களுக்கு உள்ளும் சக்திவாய்ந்த இன்னொருவன் உண்டு. சந்தர்ப்பம் வரும்போது அந்த இன்னொருவன் வெளிப்படுவான்.
குணசேகரன் படத்தின் நாயகன் குப்பை பொறுக்குகிறவன். அவன் எப்படி அவனுக்குள் இருக்கும் இன்னொருவனால் குபேரனாகிறான் என்பது கதை.
ஹீரோவாக ஆதித்யாவும், ஹீரோயினாக கவிநயாவும் நடிக்கின்றனர். சென்னையில் துவங்கி தென் தமிழகம் முழுவதும் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.