மலையாளப் படவுலகம் அளவில் சிறியது. சம்பளம் அதைவிடச் சிறியது. நாலு காசும், நாலு பேர் அறியப் புகழும் வேண்டும் என்றால் தமிழிற்கோ, ஹிந்திக்கோ வந்தாக வேண்டும்.
நயன்தாரா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர் என இதற்கான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்போது இயக்குநர்களின் முறை. திறமையான மலையாள இயக்குநர்கள் தமிழிற்கு வருகிறார்கள். பாசில், ப்ரியதர்ஷன், பரதன், சித்திக், டி.வி.சந்திரன், ஷாஜி கைலாஷ், லோகித தாஸ் வரிசையில் மேலும் ஒருவர் லால் ஜோஸ்.
மீசை மாதவன், சாந்துப் பொட்டு, அரபிக்கதா போன்ற சூப்பர் ஹிட் படங்களின் இயக்குநர். இவரது கிளாஸ் மேட்ஸ் படம் நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரில் தமிழில் ரீ-மேக் செய்யப்படுகிறது.
மலையாளத்தில் மட்டுமே படம் இயக்கிக் கொண்டிருந்த லால் ஜோஸ், நேரடித் தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார். இதற்காகத் தனுஷிடம் கால்ஷீட் கேட்கத் தீர்மானித்துள்ளார். அவர் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் புதுமுகங்களுக்கு அடிக்கும் யோகம்!