நண்பர்கள் யுவன், அர்விந்த் கிருஷ்ணாவுடன் தொடங்கப்பட்ட ஒயிட் எலிஃபெண்ட்ஸ் பட நிறுவனம் கலகலத்துவிட்டது. ஆயிரத்தில் ஒருவன் படத்தோடு நண்பர்கள் இருவருக்கும் குட்பை சொல்லிவிட்டார் செல்வராகவன். இனி?
தனியாவர்த்தனம்தான்! நண்பர்கள் பிரிந்தாலும், தயாரிப்பு கம்பெனி தொடங்கும் ஆசை செல்வராகவனிடம் அப்படியே இருக்கிறது. யாருடனும் கூட்டுச் சேராமல் தனியாகவே பட நிறுவனத்தை தொடங்க இருக்கிறாராம்.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மாதிரி, பிற இயக்குனர்களுக்கே இவரது நிறுவனத்தில் முன்னுரிமை. தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஓ ஓ புரொடக்சன் என்ற பெயரை பரிசீலித்து வருகிறார் செல்வா.
ஜேஜே என வளர வாழ்த்துக்கள்!