Publish Date: Fri, 18 Apr 2008 (16:54 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:17 IST)
படம் வெளியான பிறகு படத்தை ட்ரிம் செய்வது வாடிக்கையான ஒன்று. நேபாளி மூன்று மணி நேரம் ஓடுகிறது. உட்கார முடியாமல் திணறுகிறார்கள் ரசிகர்கள்.
இதுபோன்ற படங்களுக்கு இயக்குனரே எடிட் செய்ய வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்ப்பதில்லை. ஆபரேட்டரே அந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்துவார்.
இந்த ஆபத்தை உணர்ந்து வி.இஸட். துரை இருபது நிமிடங்களுக்கு நேபாளியில் கத்திரி போட்டிருக்கிறார். தவிர போலீஸ் தரப்பிலிருந்து இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போலீஸை ரொம்பவும் கேவலப்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு. முக்கியமாக மீரா ஜாஸ்மினைப் பார்த்ததும் ஐட்டியுடன் நிற்கும் அந்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரம்.
படத்தில் இருபது நிமிடக் காட்சிகளை எடிட் செய்த துரை, ஜட்டி போலீஸையும் வெட்டி எறிவாரா?