நேபாளி நல்ல பெயரை வாங்கித் தந்த சந்தோஷத்தில் இருக்கிறார் பரத். இனி விஜய், அஜித் மாதிரி ஆக்சன் படங்களில் புகுந்து புறப்படலாம் என்ற நம்பிக்கையை அவருக்கு தந்திருக்கிறது நேபாளி.
நம்பிக்கை தந்தது நேபாளி என்றாலும், அச்சாரம் போட்டது பேரரசுவின் பழனி. அந்த நன்றியுணர்வில் பேரரசுக்கு ஆறு சவரனில் தங்கச் சங்கிலி ஒன்றை பரிசளித்திருக்கிறார். ஏன் ஆறு சவரன்?
பழனி ஆறுமுகனின் அறுபடை வீடுகளில் ஒன்றல்லவா! அதுதான் ஆறு சவரன்.
அடுத்து ஹரியின் சேவலில் நடிக்கிறார் பரத். படம் வெற்றி பெற்றால், தங்கத்தில் சேவல் ஒன்றை எதிர்பார்க்கலாமா?