Publish Date: Thu, 17 Apr 2008 (18:54 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:17 IST)
யாரைப் பார்த்தாலும் இப்படி கேள்விக் குறியுடன்தான் கேட்கிறார்கள். ஸ்ருதி கமல், மாதவன் ஜோடியாக நடிப்பது ஏறக்குறைய உறுதியாகி இருந்தது. மியூஸிக்கல் சப்ஜெக்ட், அதுதான் ஒத்துக்கொண்டேன் என்றார் ஸ்ருதி. படத்தை நிஷிகாந்த் இயக்குவதாக ஏற்பாடு.
ஆனால், இப்போது அனைத்தும் தலைகீழாகியிருக்கிறது. கதையை மாற்றிவிட்டார்களாம். இயக்குனரும் மாறப்போகிறாராம். தயாரிப்பு நிறுவனமும் மாறியிருக்கிறது.
இத்தனை மாற்றங்களுக்கிடையில் ஸ்ருதி மட்டும் மாறாமலிருப்பாரா? அதுதான் நடிப்பாரா என்று கேள்விக் குறியோடு கேட்கிறார்கள்.
அதே நேரம் ஸ்ருதியோடு நடிப்பதற்காக பத்து கிலோ எடை குறைந்து, தயாராக இருக்கிறார் மாதவன்.
காலம்தான் மாதவனின் கார்த்திருப்புக்கு பதில் சொல்ல வேண்டும்!