Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குருவி இசை விழா!

Advertiesment
குருவி இசை விழா!
, வியாழன், 17 ஏப்ரல் 2008 (18:50 IST)
சிலு சிலு ஏசி இல்லை, சீருடை சிப்பந்திகள் இல்லை. ஆனாலும் இதயத்தில் ஈரமுடன் பதிந்தது குருவி இசை விழா.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸின் முதல் படம் குருவி. இசை வெளியீட்டு விழாவிற்கு நட்சத்திர விடுதிகளை நாடிச் செல்லாமல் லிட்டர் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளியை தேடி வந்தது, உதயநிதியின் உதாரண குணம். பள்ளிக்கு தாராளமாக நன்கொடி அளித்து பெயரிலிருக்கும் நிதிக்கும் பெருமை சேர்த்துக் கொண்டார். தயாரிப்பாளராகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், கில்லி படம் பார்த்தே அந்த ஆசை வந்தது என்றும், தான் தயாரிப்பாளரானதற்கு விஜயே காரணம் என்றும் கூறினார் மகா அடக்கத்துடன்.

விக்ரம் முதல் கேசட்டை வெளியிட, விஷால் பெற்றுக்கொண்டார். முன்னணி இளம் நடிகர்களை ஒன்றாகப் பார்ப்பதே மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் இனிப்பு தடவுவது போல் இருந்தது விக்ரம் விஜயை புகழ்ந்தது.

விக்ரம் வித்யாசாகரின் ரசிகர். அவர் பாடிய பாடலையும் வெகுவாக புகழ்ந்தார்.

வழக்கமான லோ டெசிபல் குரலில் பேசிய விஜயின் வார்த்தைகளில் ஹை டெசிபலில் ஒலித்தது விஜய் - உதயநிதி நட்பு. தயாரிப்பாளராக சந்தித்து இப்போது நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம் என்றார் முதத்தாய்ப்பாக.

தரணிதான் கேப்டன் ·ப் தி ஷிப். வெற்றி நிச்சயம் என்று முழங்கியவர், விஜய் இதுவரை நடித்தப் படங்களிலேயே அதிகம் உழைத்த படம் குருவி என்ற தகவலையும் சேர்த்துக் கொண்டார்.

எளிமையாக நடந்தாலும் இதயத்தில் ஏறி உட்கார்ந்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும், குருவி இசை விழா!

Share this Story:

Follow Webdunia tamil