விருந்து என்றால் இறுதியில் இனிப்போடுதான் வழியனுப்புவார்கள். படத்தின் கிளைமாக்ஸும் அப்படித்தான். ரசிகர்களை ஈர்க்கவில்லையென்றால் மொத்தப் படமும் காலி.
யாரடி நீ மோகினியின் கடைசி பத்து நிமிடங்களில் கிறுகிறுத்துப் போகிறார்கள் ரசிகர்கள். காரணம் குழப்பம். நயன்தாராவின் மெகா சைஸ் குடும்பம் தனுஷ் வீட்டில் குடியேறுகிறது. மெயின் கேரக்டரான தாத்தாவோ வீட்டை விட்டு வெளிநடப்பு செய்கிறார். தனுஷ், நயன்தாரா இணைந்தார்களா? இல்லை இது வெறும் சந்திப்பு மட்டும்தானா? தலையை பிய்த்துக் கொள்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த குழப்பம் புரிந்ததும் தனுஷ், நயன்தாரா இணைந்து குடும்பம் நடத்துவதாக அவசர அவசரமாக ஷூட் செய்து அனைத்து திரையரங்குகளுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். இனி திரையரங்குகளில் இந்த புதிய கிளைமாக்ஸ்தான் காட்டப்படுமாம்.