சைபர் க்ரைமில் புகார் கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் நடிகை சொர்ணமால்யா.
கடந்த வருடங்களில் அதிகப் பிரச்சனைகளை சந்தித்த நடிகை சொர்ணமால்யாவாகத்தான் இருக்கும். காஞ்சி சாமியார்களுடன் தொடர்பு, கட்டிய கணவருடன் பிரவு, ஆபாச மாரஃ·பிங் வீடியோக்கள்.
இறுதியாக பிரகாஷ் ராஜுடன் இணைத்து கிசுகிசுக்கள் கூட பரப்பப்பட்டன. பாலிவுட் நடன இயக்குனரால் அந்த கிசுகிசுவிலிருந்து தப்பித்தார் சொர்ணமால்யா.
இந்நிலையில்தான் சொர்ணமால்யா இளைஞர் ஒருவருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அந்த இளைஞர் ஏற்கனவே திருமணமானவர், அவருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்தில் இருப்பது சொர்ணமால்யா அல்ல என்றும் ஒருதரப்பினர் கூறினர்.
ஆனால், குறிப்பிட்டப் படத்தில் இருப்பது நான்தான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் சொர்ணமால்யா. அந்தப் புகைப்படம் 2002ல் அவரது திருமண வரவேற்பின் போது எடுத்தது. உடனிருப்பது அவரது முன்னாள் கணவர் அர்ஜுன்.
விஷமிகள் சிலர் வேண்டுமென்றே தனது பெயருக்கு களங்கம் கற்பிக்க அந்தப் புகைப்படத்தை இப்போது பிரசுரித்துள்ளார்கள் என்று கூறியவர், இது குறித்து சைபர் க்ரைமில் புகார் கொடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்!