சரத்குமாரின் படத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார் நடிகை திவ்யா!
திரையுலகம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவுகள் அங்கங்கே வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதற்கு முதல் பலி ஆகியுள்ளார் திவ்யாவாக பெயர் மாறியிருக்கும் குத்து ரம்யா.
வின்சென்ட் செல்வா இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'காக்கி'. ஜி.கே. ·பிலிம்ஸ் தயாரித்த இப்படம் சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் நாயகியாக ஒப்பந்தமானவர் திவ்யா.
நின்றுபோன 'காக்கி'யை மீண்டும் தூசு தட்டும் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்திற்கு போட்டியாக கன்னட திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகை திவ்யா கலந்துகொண்டார். இது பெரும் புகைச்சலை தமிழ் சினிமாவில் கிளப்பியது.
அவரை, உண்ணாவிரதப் போராட்டத்தின் மூளையாக செயல்பட்ட சரத்குமாரே தனது படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமா?
திவ்யாவை கழற்றிவிட்டு 'காக்கி'க்கு வேறு கதாநாயகி தேடி வருகிறார்கள்.