தனி விமானம், தங்குவதற்கு நட்சத்திர விடுதியின் ஒரு தளம் முழுவதும், பாதுகாப்பிற்கு ஆயுதம் ஏந்திய போலீசார், ஏறி நிற்கப் போகும் மேடையோ அரை கோடியில்!
அதிரடி நடிகர் ஜாக்கி சானுக்குதான் இத்தனை ஆர்ப்பாட்டங்களம்.
இம்மாதம் 25 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. தமிழக முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, மம்முட்டி, விஜய், நடிகைகள் ஹேமமாலினி, மல்லிகா ஷெராவத், அசின். இத்தனை பேர் இருந்தாலும் எதிர்பார்ப்பெல்லம் ஜாக்கி சானுக்குதான்.
தனி விமானத்தில் சென்னை வரும் அவருக்காக, அடையாறல் உள்ள நட்சத்திர விடுதியின் ஒரு தளம் தயாராகி வருகிறது. இந்த தளத்தில் அவருக்கும் அவருடன் வரும் பாதுகாவலர்களுக்கும் மட்டுமே அனுமதியாம்.
விமானம், நட்சத்திர விடுதி என ஜாக்கி சானின் விரும்தோம்பலுக்கு மட்டுமே பல கோடிகள் செலவழிக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
எல்லாம் தசாவதாரம் திருப்பிக் கொடுக்கும் என்ற நம்பிக்கைதான்!