விஜயின் குருவி படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 16 ஆம் தேதி நடக்கிறது!
உதயநிதி தயாரிப்பில் தரணி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய், த்ரிஷா நடித்துள்ளனர்¨. கில்லி படத்திற்கு இசையமைத்த வித்யாசாகரே குருவிக்கும் இசை.
ஐந்து விதமான டியூன்கள் போட்டிருக்கிறார் வித்யாசாகர். அனாக் ஆடியோ பாடலை வெளியிடுகிறது. படத்தின் வெளிநாட்டு ஆடியோ உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பொல்லாதவன் படத்தில் எங்கேயும் எப்போதும் ரீ-மிக்ஸ் பாடலை பாடி இசையமைத்த யோகி பி குருவியில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.