ரவுண்ட் கட்டி அடிக்க ராடான் நிறுவனம் சன் டி.வி.யுடன் கைகோர்த்து இறங்கியிருக்கிறது. முதல் படம் சரத்குமாருடன் என்பது முடிவாகிவிட்டது.
வடிவேலுவை ஹீரோவாக்கி ஒரு படம் தயாரிக்க ராடானுக்கு திட்டம் இருந்தது. இந்திரலோகத்தில் எதிர்பாராத தோல்வியால் அந்த வாய்ப்பை நிராகரித்தார் வடிவேலு.
இப்போது அவருக்கு பதில் கருணாஸை ஹீரோவாக்க வேலைகள் நடந்து வருகிறதாம். சீனிவாசனின் 'வடக்கு நோக்கி எந்திரம்' படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையுடன் நாயகனாக நடிக்க கண்களில் கனவுடன் காத்திருக்கிறார் கருணாஸ். அவருக்கு மேஜாடி 'நம்நாடு' கார்த்திகாவாம்.
ராடான் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கலாம் என்பது சமீபத்திய செய்தி.