கடவுள் என்றதும் அவசரப்பட்டு பாலாவின் நான் கடவுள் என நினைத்துவிடப் போகறீர்கள். இது சிம்புதேவனின் அறை எண் 305ல் கடவுள்.
கஞ்சா கருப்பு, சந்தானம் ஹீரோ வேஷம் கட்டியிருக்கும் இந்தப் படத்துக்கு இம்சை அரசன் அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தைப் பார்த்த ஷங்கருக்கு ரொம்பவே திருப்தி.
பிரகாஷ் ராஜ், மதுமிதா, ஜோதிர்மயி நடித்திருக்கம் இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
காமெடி படமென்றாலும் அது கருத்துடன் இருக்கும் என்றார் இயக்குனர் சிம்புதேவன்.
வரும் 18 ஆம் தேதி சிம்பு தேவனின் கடவுளை திரையில் ரசிகர்கள் தரிசிக்கலாம்.