Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாம் தூம் - ஜெயம் ரவி விளக்கம்!

Advertiesment
தாம் தூம் - ஜெயம் ரவி விளக்கம்!
, செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (17:06 IST)
webdunia photoWD
மறைந்த இயக்குனர் ஜீவாவின் கடைசி படம் தாம் தூம். இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்? நேற்று நடந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இதற்கு விளக்கமளித்தார் ஜெயம் ரவி.

விழாவில் ஹாரிஸ் ஜெயராஜ், வசனகர்த்தா எஸ். ராமகிருஷ்ணன், நாயகன் ஜெயம் ரவி, நாயகிகள் லட்சுமிராய், கங்கனா ரவத், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் என அனைவரும் கலந்துகொண்டனர்.

என்னால் எந்தப் படமும் தாமதமானதில்லை என்று கூறிய ஹாரிஸ் ஜெயராஜ், ஜீவா ரஷ்யா கிளம்பும்போது, படப்பிடிப்பு முடிந்துவந்து கம்போஸங்கில் உங்களுடன் கலந்து கொள்கிறேன் என்று கூறியதை மேடையில் பகிர்ந்து கொண்டபோது அரங்கில் சோகத்தின் நிசப்தம்.

ஜெயம் ரவி பேசும் போது, தாம் என்றால் கிராமத்தில் நடக்கும் அமைதியான நிகழ்வுகளை குறிக்கும். தூம் என்றால் ரஷ்யாவல் நடக்கும் அதிரடி காட்சிகள் என்று ஜீவா படத்தின் பெயர் காரணத்தை கூறியதை மேடையில் குறிப்பிட்டார்.

படத்தின் எண்பது சதவீத காட்சிகளை ஜீவாவே படமாக்கினார். மீதி இருபது சதவீதக் காட்சிகளை எழுதி வைத்திருந்தார். அதன்படிதான் படமாக்கினேன் என்றார் ஜீவாவின் இணை இயக்குனரும், ஜீவா எடுக்காத பகுதிகளை நிறைவு செய்தவருமான மணிகண்டன்.

டிரெய்லர் வெளியீட்டு விழா ஜீவாவை நினைவுகூரும் ஒரு விழாவாகவே அமைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil