நாளை ஏவி.எம். ஸ்டுடியோவல் புதிய பயணம் படத்தின் தொடக்க விழா. இரண்டு ஹீரோயின்கள். மாமதுரை மிதுனா மற்றும் ஜெனிஃபர்.
இனிவரும் குறிப்பை கவனமாக படிக்கவும், பிசகினால் தவறிட வாய்ப்பு உண்டு. புதிய பயணம் படத்தை தயாரிப்பவர் முகமது ரஃபி. இவர் ஒரு ஆசிரியர். புதிய பயணம் தயாரிப்பாளராக இவருக்கு முதல் படம்.
படத்தை இயக்குகிறவர் எம்.டி. முத்து. யார் இவர் என்று நெற்றி சுருக்க வேண்டாம். முகமது ரஃபிதான் பெயரை எம்.டி. முத்துவாக மாற்றி படத்தை இயக்குகிறார். சரி நாயகன்?
எஸ்! நீங்கள் நினைத்தது போல் அதுவும் ரஃபிதான். நடிகராக அவருக்கு என்ன பெயர் என்பது நாளை தெரியும்.
படத்துக்கு இசை பிரசாத் கணேஷ். எம்.ஜி. கன்னியப்பன், வீர ஆதித்யன், பாவலன், பாரதி கல்யாண் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். மனோரமா, டெல்லி கணேஷ் ஆகியோரும் படத்தில் உண்டு.
ஆசிரியர் பாடம் நடத்தாமல் படம் எடுக்கிறாரா, பார்ப்போம்!