வருடம்தோறும் 125 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யும் திட்டம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு நடைமுறைக்குக் கொண்டு வந்தது அகில உலக மலையாளிகள் சங்கம்.
மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திவரும் இந்த நல்ல விஷயத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் கமல். இதற்கு நிதி திரட்ட நடந்த கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் கமல்ஹாசன்.
இதேபோன்றதொரு திட்டத்தை நூருல் இஸ்லாம் மருத்துவ அறிவியல் மையமும் கேரளாவில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்க நடிகர் மம்முட்டி சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் இத்திட்டத்திற்குத் தேவையான பணத்தைத் திரட்டப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அவர் முன்வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள நூருல் இஸ்லாம் மருத்துவமனையில் இந்த இலவச அறுவை சிகிச்சைகள் நடக்கவுள்ளன.