சுந்தர் சி யின் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக நமீதா இருப்பார்.
சண்ட படத்திற்குப் பிறகு சுந்தர் சி நடிக்கும் 'பெருமாள்' படத்தில் நமீதா இணைந்து நடிக்கிறார். அத்துடன் 'தீ' படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
தாதா, தறுதலை என்றெல்லாம் விளிம்பு நிலை கதாபாத்திரத்தில் விளாசிக் கொண்டிருந்த சுந்தர் சி காக்கி அணிந்து கஞ்சி போட்ட விறைப்புடன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் 'தீ'. இதில் சுந்தர் சி என்கவுண்டர் ஸ்பெலிஸ்டாக வருகிறார்.
சுந்தர் சிக்கு ஜோடி ராகிணி. முக்கியமான வேடம் ஒன்றில் மாளவிகா நடிப்பதாக இருந்தது. தற்போது மாளவிகா கர்ப்பமாக இருப்பதால் 'தீ'யில் அவர் நடிக்க முடியாத நிலை.
மாளவிகாவுக்கு மாற்றாகத் தமிழில் இருக்கும் ஒரே நடிகை நமீதா. கேட்கிறவர்களுக்கு எல்லாம் கால்ஷீட் இல்லை என்று சொல்லாத ஒரே நடிகையும் அவர்தான். பிறகென்ன அவரையே 'தீ'யில் பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.
தீ பெட்ரோல் ஊற்றியது போலத் திகுதிகுவென எரியப் போகிறது.