இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சிம்புதேவனின் அறை எண் 305ல் கடவுள்.
படத்தின் டபுள் பாசிட்டிவைப் பார்த்த ஷங்கர், இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைப் பார்த்தபோது எப்படி பரவசப்பட்டுப் பாராட்டினாரோ அப்படிப் பராட்டியிருக்கிறார்.
குருவின் பாராட்டில் மகிழ்ந்திருக்கும் சிம்புதேவனிடம் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
குரு பாராட்டிய படம் குழிபறிக்காது என்ற நம்பிக்கைதான் அது!