அரசியலோ ஆன்மீகமோ... சும்மா இருக்கும் ரஜினியைச் சீனுக்குள் நுழைப்பதில் கெட்டிக்காரர்கள் நமது பத்திரிகையாளர்கள்.
அப்படித்தான் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனியிடமும் ஒரு கேள்வி கேட்டார் பத்திரிகையாளர் ஒருவர்.
ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வரும் பதினெட்டாம் தேதி துவங்குகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார் டோனி.
மொகாலி அணியை ப்ரீத்தி ஜிந்தா தனது காதலருடன் சேர்ந்து வாங்கியுள்ளார். கொல்கத்தா அணியை வாங்கியிருப்பவர் ஷாரூக் கான். டெல்லி அணி தனது விளம்பரத் தூதராக அக்ஷய் குமாரை நியமித்துள்ளது.
சரி, சென்னை அணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை நியமித்தால்...? பத்திரிகையாளர் இந்தக் கேள்வியைக் கேட்டதும், ஓ, அது அற்புதமாக இருக்கும். இங்கு அவர் கடவுள் மாதிரி. அவர் மேன்மையானவர், எளிமையானவர். ஹி இஸ் அமெஸிங்! அவர் எங்கள் அணியில் இடம்பெற்றால், அது அற்புதமாக இருக்கும் என்று உணர்ச்சிவசப்பட்டார் டோனி.
சும்மா இருப்பவரைப் பந்து வீச வைக்காமல் இருக்க விடமாட்டார்கள் போல!