ரோஷன் ஆன்ட்ரூ வளர்ந்துவரும் மலையாள இயக்குநர். இப்படிச் சொன்னால் பாதிப் பேருக்குப் புரியாது.
விஜி இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறதே 'வெள்ளித்திரை' திரைப்படம், அதன் ஒரிஜினல் 'உதயனாறுதாரம்' படத்தை மலையாளத்தில் இயக்கியவர்.
ரோஷன் ஆன்ட்ரூவின் படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டு நன்றாக ஓடுவதால், தமிழ் சினிமா வழக்கப்படி அவரின் புதிய படம் ஒன்றும் தமிழுக்கு வருகிறது. இது ரீ-மேக் அல்ல, டப்பிங்!
பி.வி.கங்காதரன் தயாரிப்பில் ரோஷன் ஆன்ட்ரூ இயக்கிய படம் 'நோட்புக்'. தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ரோமா நாயகி. பள்ளிக்கூட காதல் கதையான 'நோட்புக்' மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சுரேஷ் கோபி சிறிய வேடம் ஒன்றில் இதில் நடித்திருந்தார்.
'நோட்புக்'கை 'இளமான்கள்' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். படம் இரண்டுவாரம் ஓடினாலே லாபம் என்ற கால்குலேஷனில்தான் வெளிவரப் போகிறது.