ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் புதிய படம் 'நினைத்தாலே இனிக்கும்'.
கமல், ரஜினி இணைந்து நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் ரீ-மேக் அல்ல இது. பிறகு? மலையாளத்தில் வெற்றிபெற்ற 'கிளாஸ்மெட்ஸ்' படத்தின் ரீ-மேக்.
மலையாளத்தில் பிரித்விராஜ், நரேன், ஜெய்சூர்யா நடித்திருந்தனர். தமிழில் ஷக்தி, ஸ்ரீநாத்துடன் பிரித்விராஜூம் நடிக்கிறார். மலையாளத்தில் காவ்யா மாதவன் நடித்த வேடத்தை தமிழில் செய்பவர் ப்ரியாமணி.
படத்தை குமாரவேல் என்பவர் இயக்குகிறார். இவர் நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர்.
'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தில் நடித்துவரும் ஷக்தி, அடுத்து 'ஆட்டநாயகன்' படத்தில் நடிக்கிறார். இதற்கு நடுவில் 'நினைத்தாலே இனிக்கும்' படத்திற்கம் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.