Publish Date: Sat, 12 Apr 2008 (20:23 IST)
Updated Date: Sat, 12 Apr 2008 (20:23 IST)
அடுத்து நந்தலாலா என்பதில் உறுதியாக இருக்கிறார் மிஷ்கின். நாயகி ஸ்னிக்தா. நினைத்தபடி நாயகன் கிடைக்கவில்லையெனில், தானே நடிப்பது என்றும் தீர்மானித்திருக்கிறார் மிஷ்கின். இசை, இளையராஜா!
ஆனால், இவை போதாது. ஆறு ஏழு வயதில் குட்டிகையான ஒரு சிறுவன் வேண்டும். நந்தலாலாவின் மைய கதாபாத்திரமே இந்த சிறுவன்தானாம்.
ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளும் தெரிந்த சுட்டியான ஒரு சிறுவனுக்காக தேடி அலைகிறார் மிஷ்கின். இணையதளம் வழியாகவும் சுட்டிகளுக்கான தேடல் நடந்து வருகிறது.
மிஷ்கினின் மனதை கவரும் சிறுவனுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு அகலத் திறந்திருக்கிறது என்று அர்த்தம். அந்த அதிர்ஷ்டசாலி யார்? மிஷ்கினின் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது!