கே.ராஜேஷ்வர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் இந்திர விழா. ஸ்ரீகாந்த், நமிதா, ஹேமமாலினி நடிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா நடிப்பதாக இருந்தது. அவர் கர்ப்பமாக இருப்பதால் அவருக்குப் பதில் சொர்ணமால்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் ரகுவரனும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஸ்ரீகாந்த், நமிதா, ஹேமமாலினி, விவேக்குடன் ரகுவரனும் இந்திரவிழா போட்டோ செஷனில் கலந்து கொண்டார்.
ரகுவரனின் அகால மரணம் இந்திரவிழா படக்குழுவை நிலைகுலைய வைத்தது. அவருக்குப் பதில் இப்ேபாது நாசரிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். ரகுவரன் நடிக்கயிருந்த அடடா என்ன அழகு, கந்தசாமி ஆகிய படங்களிலும் பொருத்தமான வேறு நடிகர்களை தேடி வருகின்றனர்.