வரம் வாங்கி வந்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. துள்ளலிசையில் அவர் டியூன் போட்டால், திரையரங்கில் எழுந்து ஆட ஒரு கூட்டமே இருக்கும். அப்பா தேவாவிடம் இருந்து அவருக்குத் தபபாமல் கிடைத்த வரம் இது.
தெனாவட்டு படத்திலும் இடம் பெறுகிறது ஒரு துள்ளலிசைப் பாடல்.
'உசிலம்பட்டிச் சந்தையிலே
வசியம் பண்ணிப் போறவளே'
என்ற அந்தப் பாடலுக்கு ஜீவாவும் பூனம் பஜ்வாவும் ஆடினர். உடன் முப்பது துணை நடிகர்கள். நடன இயக்குநர் பாபி அமைத்த இந்தப் பாடலை தேனி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கினார் இயக்குநர் கதிர். வெற்றி பாடலுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் வெற்றிப் பட்டியலில் உசிலம்பட்டிச் சந்தையில் வசியம் செய்பவள் கண்டிப்பாக இடம்பெறுவாள் என்கின்றனர் பாடலைக் கேட்டவர்கள்.