Publish Date: Fri, 11 Apr 2008 (15:06 IST)
Updated Date: Fri, 11 Apr 2008 (15:06 IST)
பழைய படங்களைத் தூசு தட்டும் வேலையால் கோடம்பாக்கம் எங்கும் தும்மல் ஓசை. இந்தத் திருப்பணியில் மணிவண்ணனும் இணைந்திருக்கிறார்.
முழுநேர நடிகராகிவிட்ட மணிவண்ணன் விரைவில் ரீ-மேக் படமொன்றை இயக்குகிறார். மற்றவர்களைப்போல யாரோ ஒருவர் இயக்கிய படத்தை இவர் ரீ-மேக் செய்யவில்லை. பிறகு?
மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்து, தமிழகத்தைப் பதற வைத்த படம் நூறாவது நாள். மொட்டை சத்யராஜூம், சத்தமில்லாமல் கொலை செய்யும் மோகனும் பார்வையாளர்களை மிரட்சியின் எல்லைக்குக் கொண்டு சென்ற படம்.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுக் கொலை செய்தேன என்று உண்மைக் குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய படம் இது.
இதனை மீண்டும் எடுக்கயிருக்கிறார் மணிவண்ணன். பிற இயக்குநர்களைப் போல, தனது மகனை இதில் நடிக்க வைக்கும் எண்ணமெல்லாம் மணிவண்ணனுக்கு இல்லையாம்.
இதற்காகவே படம் வெள்ளிவிழா வரை ஓட வேண்டும்!