இனி ஹீரோவாக நடிப்பதில்லை எனச் சபதமே போட்டார் வடிவேலு. ஆனால் ஆசை யாரை விட்டது? அவர் மீண்டும் நாயகனாக நடிக்கிறார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திரலோகத்தில் நா.அழகப்பன் தோல்வியால் அப்செட்டான வடிவேலு, இனி நாயகனாக நடிப்பதில்லை என முடிவெடுத்தார். ராதிகாவின் ராடன் நிறுவனம் அவரை நாயகனாக வைத்துப் படம் தயாரிக்க முன்வந்த போதும் அதை நிராகரித்தார்.
இந்நிலையில் மீண்டும் காமெடியனாக நடித்துவரும் வடிவேலு விரைவில் கதாநாயகனாக நடிக்கிறார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோபோ, ஏகன், பேராண்மை, விஜய்யின் பெயரிடப்படாத புதிய படம் என வரிசையாக மெகா படங்களைத் தயாரிக்கும் ஐங்கரன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வடிவேலை மீண்டும் நாயகனாக்கும் முயற்சியில் இறங்கப் போகிறதாம்.
சிம்புதேவனை இயக்குநராக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறதாம். ஆக, விஷப் பரீட்சைக்கு மீண்டும் தயாராகிவிட்டார் வடிவேலு!