பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியர் செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் 'கத்திக்கப்பல்'. மணிரத்னத்திடம் உதவியாளராக தொழில் பயின்றவர் இவர்.
அனூப்குமர், மீரா வாசுதேவன் நடித்திருக்கும் கத்திக்கப்பலின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. பன்னிரெண்டாம் தேதி இசை வெளியீட்டு விழா. சத்யம் திரையரங்கில் நடக்கும் இந்த விழாவில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மணிரத்னம் ஆடியோவை வெளியிட பரத் பெற்றுக் கொள்கிறார். லிங்குசாமியும், பாக்யராஜும் ஆடியோ விற்பனையை துவக்கி வைக்கிறார்கள்.