பொம்மரிலு தெலுங்குப் படத்தை இயக்கிய டி.பாஸ்கர் அடுத்து பருகு (Parugu) என்ற படத்தை அல்லு அர்ஜூனை வைத்து இயக்கி வருகிறார்.
இவர் பருகுவை இயக்கும் முன் நடிகர் விக்ரமை சந்தித்து கதை ஒன்றைக் கூறினார். அந்தக் கதை விக்ரமுக்கு பிடித்திருந்தது. கந்தசாமியில் நடித்து வரும் விக்ரம், அடுத்து மணிரத்னத்தின் படத்தில் நடிக்கிறார். அது முடிந்த பிறகு பாஸ்கரின் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் தயாராக இருக்கும் அப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் சத்ரபதி பிரசாத் தயாரிக்கிறார். இறுதிகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் விக்ரம்.