பிருத்விராஜ் ஜோடியாக ப்ரியாமணி நடித்த மலையாளப்படம் சத்யம். வினயன் இயக்கிய இந்தப் படத்தை தமிழில் சத்யா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்.
சத்யத்தில் இணைந்த இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் ஒன்றிணைகிறது. மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற கிளாஸ் மேட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் வாங்கியுள்ளது. இந்த ரீ-மேக்கில் பிருத்விராஜ் ஜோடியாக ப்ரியாமணி நடிக்கிறார்.
கிளாஸ்மேட்ஸ் படத்திலும் பிருத்விராஜ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் பிருத்விராஜுடன் நரேன், ஜெய்சூர்யா, காவ்யா மாதவன் ஆகியோரும் நடித்திருந்தனர்.