ஆஹா திரைப்படத்தில் சமையல்காரர் டெல்லி கணேஷின் மகளை துரத்தி துரத்தி காதலித்த ராஜீவ் கிருஷ்ணாவை நினைவிருக்கிறதா? அன்று நாயகனாக திரையில் தோன்றியவர், இன்று வில்லனாக புது அவதாரம் எடுத்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தாய் முத்து செல்வன் இயக்கும் 'நியூட்டனின் மூன்றாவது விதி' படத்தில் ராஜீவ் கிருஷ்ணா வில்லனாக நடிக்கிறார். கோடீஸ்வரரான இவரை இரண்டே மணி நேரத்தில் எப்படி தெருவுக்கு கொண்டு வருகிறார் சூர்யா என்பதுதான் கதை.
ராஜீவ் கிருஷ்ணாவின் ரீ-என்ட்ரி ஆஹா என்று சொல்லும் வகையில் அமையட்டும்.