Publish Date: Thu, 10 Apr 2008 (17:46 IST)
Updated Date: Thu, 10 Apr 2008 (17:46 IST)
சில வாரங்கள் முன்பு பூபதி பாண்டியன் தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் தெலுங்கு உரிமையை தனக்கு தெரியாமல் விற்று, மொத்தப் பணத்தையும் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார் என்பது புகாரின் சாராம்சம்.
இப்போது அதே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பூபதி பாண்யடின் மீது புகார். படம் இயக்கித் தருவதாகக் கூறிவிட்டு இப்போது, இயக்கித் தராமல் ஏமாற்றுகிறார். பூபதி பாண்டியன் மீது இந்தப் புகாரை கொடுத்திருப்பவர் தயாரிப்பாளர் கே.பி.பாலு.
இவரது தயாரிப்பில் சில நாட்கள் ஷுட்டிங்கும் நடத்தியிருக்கிறாராம் பூபதி பாண்டியன். விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து நடக்க இருக்கிறது.