படத் தயாரிப்பில் முழு வீச்சில் இறங்கியுள்ளது ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம்.
அஜித்தின் ஏகன், ஜனநாதனின் பேராண்மை படங்களை தயாரித்து வரும் ஐங்கரன் அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை தயாரிக்கிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, த்ரிஷா நடிக்கயிருக்கும் சர்வம் படத்தின் தயாரிப்பும் இந்நிறுவனமே!
ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கி வரும் செல்வராகவன் ஐங்கரன் இன்டர்நேஷனல்சுக்காக இரண்டு படங்களை இயக்குகிறார். இதில் ஒன்றில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு படத்தில் யார் நடிப்பது என்பது இன்னும் முடிவாவில்லை. அனேகமாக சூர்யா நடிக்கலாம் என்கிறார்கள், ஐங்கரன் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள்.