திருப்பதியில் பேரரசுவின் பஞ்ச் வசனங்களை பேசி நடித்தார் அஜித். அதற்குப் பிறகு பஞ்ச் என்றாலே பறந்துவிடுவார். அப்படிப்பட்டவரை மீண்டும் பஞ்ச் டயலாக் பேச வைத்திருக்கிறார் ராஜு சுந்தரம்.
எதிரிகளுடன் அஜித் மோதும்போது, ஆக்சனுடன் பஞ்ச் வசனங்களும் பொறி பறக்குமாம். அந்தப் பொறிகளில் ஒன்று...
'எமன்கிட்டயிருந்து தப்பிக்கலாம். ஆனா ஏகன் கிட்டயிருந்து தப்பிக்கவே முடியாது!'
இதுபோன்ற அஜித் பேசும் பஞ்ச் வசனங்கள் மன்றங்கள் வழியாக ரசிகர்களுக்கு அனுப்பப்ட்டு வருகிறது. படம் வெளியாகும் போது போஸ்டர் அடிக்க உதவும் என்பதற்காம் இந்த ஏற்பாடு.