தனுஷின் யாரடி நீ மோகினி தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம் பிடித்துள்ளது. விஜய், அஜித் படங்களுக்கு இணையாக இந்தப் படத்திற்கும் மெகா ஓபனிங்.
ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் என்எல்சி எனப்படும் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாவுக்கு முக்கிய பங்கு உண்டு.
இங்கு யாரடி நீ மோகினி வெளியான முதல் இரு தினங்களில் மூன்று கோடி ரூபாய் வசூலித்ததாக விநியோகஸ்தர்கள் தரப்பு கூறுகிறது.
நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வசூலில் பில்லாவுக்கு அடுத்த இடத்தை மோகினி கைப்பற்றும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.