Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குசேலனில் ஃபுளோரா!

Advertiesment
குசேலனில் ஃபுளோரா!
, வியாழன், 10 ஏப்ரல் 2008 (15:22 IST)
போலி விசா மூலம் அமெரிக்காவுக்கு ஆள் கடத்த முயன்றார் என சில வாரங்கள் முன்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டவர் ஃபுளோரா.

இந்தச் செய்தி வெளியான உடனே, ஃபுளோராவிடம் விளக்கம் கேட்காமல் அவரை நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கினர்.

ஆதரவு ஏதுமின்றி இருந்த ஃபுளோராவுக்கு குசேலுடு படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பளித்துள்ளார் பி. வாசு. குசேலன் படம் தெலுங்கில் குசேலுடு என்ற பெயரில் தயாராகிறது. ரஜினியுடன் ஜெகபதி பாபு, மம்தா நடிக்கின்றனர். இதில் இடம்பெறும் குத்து‌பாடலொன்றுக்கு ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் ஆடினார் ஃபுளோரா.

போலி விசா புகாருக்குப் பிறகு ஃபுளோராவை படத்தில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். அந்த தயக்கத்தை குசேலுடு தகர்த்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil