நேற்று சென்னையிலுள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் முக்கியமான கூட்டம். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட அனைத்து திரைத்துறை சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை...
உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளாத நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அந்தந்த சங்கம் மூலம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படும். 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு அனைத்துச் சங்க நிர்வாகிகளும் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும்.
ரஜினி மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தவிர்க்க வேண்டும் என்று கன்னட திரைத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூகத் தீர்வு காணப்படும்.
வருங்காலத்தில் தமிழ், கன்னட திரைத் துறையுனர் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.