வருஷா வருஷம் தீபாவளி வருவது மாதிரி, சொர்ணமால்யாவைப் பற்றியும் ஒரு கிசுகிசு வரும். சமீப காலமாக ஆபாச வீடியோ, போட்டோ என இந்தக் கிசுகிசு பரிமாண வளர்ச்சி கண்டுள்ளது.
புதிய கிசுகிசு, ஒரு புகைப்படம். சொர்ணமால்யா உதட்டோடு உதடு பதித்து ஒரு இளைஞருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையதளங்களில் உலா வருகிறது. அந்த இளைஞர் திருமணமானவர், குழந்தைகளும் அவருக்கு இருக்கிறார்கள் என்ற குறிப்பும் புகைப்படத்துடன் படிக்கக் கிடைக்கிறது.
வழக்கம் போல இந்தப் புகைப்படம் மார்ஃபிங்கா இல்லை ஒரிஜினலா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து வருகிறது. சொர்ணமால்யாவை சோகமால்யாவாக்கியிருக்கிறது இந்த புகைப்படம்.