நேற்று தெலுங்கு வருடப்பிறப்பு. உற்சாக நாளான உகாதி அன்று, அரசியல் கட்சி தொடங்கி இனிப்பு தருவார் என எதிர்பார்த்தனர் சிரஞ்சீவியின் ரசிகர்களும், அவரது இனத்தவரும்.
ஆனால் அனைவருக்கும் கிடைத்ததோ செரிக்க முடியாத சிரஞ்சீவி மார்க் ஒரிஜினல் அல்வா!
அரசியல் கட்சி தொடங்குவதற்காக, உதயசூரியன் சின்னத்தை தேர்வு செய்திருந்தார் சிரஞ்சீவி. இதற்கு ஆந்திர தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உகாதி அன்று புதிய அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் பிரமுகர்கள் பலர் சிரஞ்சீவியின் கட்சியில் இணைய ஆவலாக இருந்தனர். அந்தோ பரிதாபம்! எதிர்பார்ப்பு ஏதும் நடக்கவில்லை.
கட்சி தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என பேட்டியளித்துள்ளார் சிரஞ்சீவியின் மைத்துனரும், மக்கள் தொடர்பாளருமான அல்லு அரவிந்த். காந்திருந்தவர்கள் ஏமாந்ததுதான் மிச்சம்!