பன்னிரெண்டாம் தேதி சந்தோஷ் சுப்ரமணியம் ரிலீஸ். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, டீஸண்டான என்டர்டெய்ன்மெண்ட் என்று இயக்குனரை பாராட்டியதோடு படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
படத்தின் சில காட்சிகளை மட்டுமே பார்த்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், சென்னை, மதுரை மற்றும் என்எஸ்சி எனப்படும் வட ஆற்காடு தென் ஆற்காடு செங்கல்பட்டின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார்.
படம் திரைக்கு வரும் முன்பே படத்தை தயாரித்த கல்பாத்தி எஸ். அகோரத்துக்கு கோடிகளில் லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது.