Publish Date: Tue, 08 Apr 2008 (19:23 IST)
Updated Date: Tue, 08 Apr 2008 (19:23 IST)
'மிருகம்' சாமி அடுத்து 'சரித்திரம்' படத்தை இயக்குகிறார். ராமேஸ்வரம் படத்தை தயாரித்த நிறுவனம் சரித்திரத்தை தயாரிக்கிறது.
ராஜ்கிரண் ஹீரோ. மிருகத்தில் நடித்த ஆதிக்கு இதில் முக்கிய கதாபாத்திரம். சாமியின் படம் என்றால் நாயகிக்கும் முக்கியத்தும் இவருக்கும். சரித்திரமும் அப்படியே!
இதில் நாயகியாக நடிக்க ஹேமமாலினியை ஒப்பந்தம் செய்துள்ளார் சாமி. ஹேமமாலினி தற்போது, கே. ராஜேஷ்வரின் இந்திரவிழாவில் நடித்து வருகிறார். சரித்திரம் ஹேமமாலினிக்கு இரண்டாவது தமிழ்ப் படம்.