Publish Date: Tue, 08 Apr 2008 (19:17 IST)
Updated Date: Tue, 08 Apr 2008 (19:17 IST)
'குசேலன்' படத்தை தயாரித்து வரும் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் அடுத்து இரண்டு படங்களை தயாரிக்கிறது.
ஒன்று, ஸெல்வன் இயக்கும் 'கிருஷ்ண லீலை'. இதில் ஜீவன் நடிக்கிறார். இதற்காக கதை விவாதம் முடிந்த நிலையில் விரைவில் படப்பிடிப்புக்கு கிளம்ப இருக்கிறார்கள்.
இன்னொரு படத்தை பேரரசு இயக்குகிறார். இதில் அனேகமாக அர்ஜுன் நடிக்கலாம். பரத், வேறு படங்களில் பிஸியாக இருப்பதால், அர்ஜுன் படத்தை முடித்த பிறகு பரத் நடிக்கும் படத்தை இயக்குவது என முடிவெடுத்துள்ளாராம் பேரரசு.