நடிகர் சத்யராஜை டா போட்டு பேசியிருக்கிறார் பாரதிராஜா. சரியாகச் சொன்னால் பேசவில்லை, பாராட்டியிருக்கிறார்!
உண்ணாவிரத மேடையில் உணர்ச்சிவசப்பட்டு சத்யராஜ் கொட்டிய அனல் வார்த்தைகளுக்கு அகிலமெங்கும் உள்ள தமிழர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உணர்ச்சி பிரவாகமாக பெருக்கெடுத்துவிட்டு, சத்யராஜ் இருக்கைக்கு திரும்பியதும் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. உணர்ச்சியிலிருந்து முழுமையாக விடுபடாத சத்யராஜிடம் தொலைபேசியில் பேசியது பாரதிராஜா.
பெரியார் மாதிரியே இருந்ததுடா உன்னோட கோபம் என்று உரிமையுடன் டா போட்டு சத்யராஜை பாராட்டியிருக்கிறார். மேடையை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்த சத்யராஜின் பேச்சுக்கு உள்ளூர் தமிழர்களை விட வெளிநாடு வாழ் தமிழர்களிடம் அமோக ஆதரவாம். தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சத்யராஜை பாராட்டி வருகிறார்களாம்.