Publish Date: Tue, 08 Apr 2008 (13:34 IST)
Updated Date: Tue, 08 Apr 2008 (13:33 IST)
பரத், பூனம் பஜ்வா நடிக்கும் சேவலில் சிம்ரன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. சேவல் இயக்குனர் ஹரி, சிம்ரன் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு பெரிய நடிகை நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வரும்போது ரசிகர்கள் அவரிடம் என்னென்ன எதிர்பார்ப்பார்களோ, அத்தனையும் ஈடுசெய்வதுபோல் சிம்ரனின் கதாபாத்திரம் இருக்கும் என்றார் ஹரி.
தென் தமிழ்நாட்டில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டுள்ளார் ஹரி. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.