ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், கர்நாடகாவில் தமிழர்களை தாக்கும் கன்னடர்களை கண்டித்தும் கடந்த 4 ஆம் தேதி தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களன் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம் என்று அனைத்துச் சங்கங்களும் ஏற்கனவே எச்சரித்திருந்தன.
அதையும் மீறி மாநாட்டுப் பந்தலில் பலர் மிஸ்ஸிங். மணிரத்னம், சிவகுமார், மணிவண்ணன், இளையராஜா, பாரதிராஜா, கார்த்திக், ரீமா சென் என வராத வி.ஜ.பி.கள் நிறைய. இவர்களில் பலர் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள முடியாததற்கான காரணத்தை கடிதம் மூலமும், தொலைபேசி வழியாகவும் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன், "முறையான காரணம் தெரிவிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.